கனடாவில் 27 வயது இளம்பெண் மாயம்.. வெளியான புகைப்படம்..!!

 

கனடா நாட்டின் பேரி என்ற நகரில் வசிக்கும், கசண்ட்ரா புர்னெல் என்ற 27 வயது பெண், கடந்த 14ஆம் தேதி அன்று மாயமானார். அதன்பிறகு, அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, காவல்துறையினர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், கசண்ட்ரா புர்னெல் என்ற அந்த இளம்பெண் ரொறன்ரோ பகுதியில் இருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் தங்களிடம் உடனடியாக தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். அந்த பெண், பேரி பகுதியில் இருந்தாலும் காவல்துறையினரிடம் தெரியப்படுத்துங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

Contact Us