காதல் கணவரை பிரிகிறேன்: நடிகை சமந்தா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

நடிகை சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவை பிரியவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்த சமந்தா, நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017ம் திருமணம் செய்து கொண்டார்.

இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது, தன்னுடைய பெயரையும் சமந்தா அக்கினேனி என்று மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் படங்களில் இவர் நடித்த சில காட்சிகள், அவர்களது குடும்பத்தினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

திடீரென ஒருநாள் அவரது பெயரை S என மாற்றியிருந்தார், அப்போது தான் இவர்கள் பிரியப்போகிறார்கள் என வெளிவுலகத்துக்கு தெரியவந்தது.

இதுதொடர்பாக தினந்தோறும் வதந்திகள் பரவினாலும், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார் சமந்தா.

மேலும், விவாகரத்து செய்தாலும் தங்களது நட்பு தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Contact Us