குக்கரை திருமணம் செய்து நான்கே நாட்களில் விவாகரத்து செய்த இளைஞர்!

 

இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் எலெக்ட்ரிக் ரைஸ் குக்கரை திருமணம் செய்து, நான்கே நாட்களில் விவாகரத்து செய்ததாக தகவலொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மணமகன் போல் உடையணிந்த Khoirul Anam என்ற நபர் ரைஸ் குக்கரை மணமகள் போல அலங்கரித்து, அதை திருமணம் செய்து கொண்டதாக முகநூலில் பல புகைப்படங்களை பகிர்ந்தார்.

அந்த ரைஸ் குக்கர் வெள்ளையானதாகவும், அன்பானதாகவும் , நன்றாக சமைக்கும், சொல்வதை கேட்டு நடக்கும் விதமாக இருப்பதாலும், அதை மணந்ததாக Khoirul பதிவிட்டிருந்தார்.

மீண்டும் 4 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு பதிவு போட்ட Khoirul, வெறும் அரிசி சாதத்தை மட்டுமே அந்த ரைஸ் குக்கர் சமைப்பதால் அதை விவாகரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Contact Us