சிறுமிகளுக்கு தனி மார்க்கெட் -பெரிய தொகை.. வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய போட்டோவால் ஏழைச்சிறுமி மீட்பு

 

பாலியல் தொழிலில் சிறுமிகளுக்கு தனி மார்க்கெட் இருக்கிறது என்று பக்கத்து வீட்டு 11 வயது சிறுமியை அச்சிறுமியின் ஏழ்மையை பயன்படுத்தி ஆசைவார்த்தை கூறி பிறந்தநாள் விழாவிற்காக அழைத்துச் செல்வதாக அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற பெண்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்ட வாட்ஸ் அப் போட்டோ மூலமாக சிக்கினர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் மிகவும் வறுமையான குடும்பம் அது. அந்தப் பெண்ணுக்கு புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏழ்மை காரணமாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியவில்லை. தனது தாய்க்கு மருந்துகள் வாங்க முடியவில்லை என்று அவரின் 11 வயது சிறுமி கவலைப்பட்டு வந்திருக்கிறார். இந்த விஷயம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரியவந்திருக்கிறது .

பாலியல் தொழில் நடத்தி வந்த அர்ச்சனா என்ற பெண்ணுக்கும் இந்த விவகாரம் தெரிய வர அந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி விடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார். பாலியல் தொழிலில் சிறுமிகளுக்கு என்றே தனி மார்க்கெட் இருக்கிறது என்றும் அதுவும் தொழிலில் புதிய பெண்கள் என்றால் தொகை அதிகமாக கிடைக்கும் என்றும் அர்ச்சனாவுக்கு தெரிந்ததால், அந்த பதினொரு வயது சிறுமியை எப்படியாவது தொழிலில் ஈடுபடுத்தி விடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்.

இதற்காக புரோக்கர்களிடம் சேர்ந்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். அதன்படி பிறந்தநாள் விழாவிற்காக செல்கிறேன். அப்போது தனது குழந்தையை பார்த்துக்கொள்ள சிறுமியை அழைத்து தருகிறேன் ரூபாய் 5 ஆயிரம் பணம் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இந்த சிறிய வேலைக்கு இவ்வளவு பெரிய தொகையா என்று வாய் பிளந்த அந்த ஏழைத் தாய், அர்ச்சனாவின் சதி அறியாமல் அவருடன் தன் மகளை அனுப்பி வைத்திருக்கிறார்.

உடனே ரஞ்சனா, கவிதா ஆகிய கூட்டாளிகளையும் சேர்த்துக்கொண்ட அர்ச்சனா, சிறுமியை கொராடி ஓம் நகர் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிறுமியை தங்க வைத்துவிட்டு, அச்சிறுமியை போட்டோ எடுத்து பதினொரு வயது சிறுமி என்றும், தொழிலுக்கு புதிது என்றும் வாட்ஸ்அப் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு தகவல்களையும் போட்டோவையும் அனுப்பி இருக்கிறார்கள்.

இதைப்பார்த்து விட்டு வாடிக்கையாளர்கள் பலரும் பேரம் பேசி வந்த நிலையில், ஒருவர் 40 ஆயிரம் தருவதாக கூறியிருக்கிறார். அவருடன் சிறுமியை அனுப்புவது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அதன்படி அந்த இடத்துக்கு வந்த நபர் ஒரு போலீஸ் அதிகாரி என்பது பின்னர்தான் அர்ச்சனாவுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் தெரியவந்து இருக்கிறது.

அந்த நபர் வீட்டுக்குள் நுழைந்ததுமே அவரை பின்தொடர்ந்து வந்த போலீசார் வீட்டை சுற்றிவளைத்து விட்டனர். அர்ச்சனா, ரஞ்சனா ,கவிதா 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே பலமுறை சிறைக்குச் சென்ற வந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது.

மீட்கப்பட்ட சிறுமி பாதுகாப்பாக காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். இந்த பெண்கள் இன்னும் எத்தனை சிறுமிகளை இப்படி மோசடி செய்திருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Contact Us