வீட்டின் கழிவறைக்கு சென்ற சிறுமி.. பதுங்கியிருந்த கொடிய விஷப்பாம்பு.. அதிர்ச்சி சம்பவம்..!!

 

சவுதி அரேபியாவில் உள்ள அபா என்னும் நகரில் வசிக்கும் 6 வயதுடைய சிறுமி தமரா அப்துல் ரகுமான், நேற்று வீட்டிலிருக்கும் கழிப்பறைக்கு சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த கொடிய விஷமுள்ள விரியன் பாம்பு சிறுமியை கடித்திருக்கிறது. இதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை குடும்பத்தினர், உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு, சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி பரிதாபமாக பலியானார். சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாவது, எங்கள் வீட்டினுள் பாம்பு வந்ததைப் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. நாட்டின் பாலைவனத்திலும், மலைப்பகுதிகளிலும் தான் அதிகமாக பாம்புகள் இருக்கின்றன.

எனினும் நகரங்களில் பாம்புகள் குறைவாகத்தான் இருக்கும். கொரோனா விதிமுறை தளர்த்தப்பட்ட பின், தமரா தற்போது தான் உற்சாகமாக பள்ளிச்சென்று கொண்டிருந்தார் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்கள்.

Contact Us