பாடம் கற்க வந்த சிறுமி…. ஆசிரியரின் கொடூர செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

 

பாகிஸ்தானில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக பள்ளிக்கு பாடம் கற்க வந்த 12 வயது மாணவியை ரஹ்மான் என்னும் ஆசிரியர் அவரது உதவியாளர் முயற்சியில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு மட்டுமின்றி அந்த மாணவியை பாலைவனத்தில் விட்டு விட்டு அங்கிருந்து இருவரும் தப்பி சென்றுள்ளார்கள்.

இதனையடுத்து பாலைவனத்தில் தனியாக நின்று அழுது கொண்டிருந்த அந்த சிறுமியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் 12 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் ரஹ்மான் மற்றும் அவரது உதவியாளர் இருவரையும் கைது செய்துள்ளார்கள்.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் நீதிமன்றம் மேல் குறிப்பிட்டுள்ள வழக்கிற்கு தற்போது அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது பாடம் கற்க வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனையையும், அந்தக் குற்றத்திற்கு உதவி புரிந்த உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

Contact Us