4 வருடம் ஆகியும் பிள்ளை இல்லை… நடிக்க ஆசை… இன்று வாழ்க்கையை தொலைத்த பல்லாவரம் சமந்தா !

தமிழ் நாடு பல்லாவரத்தில் பிறந்தவர் நடிகை சமந்தா. இது பலருக்கு தெரியாது. தமிழில் அதர்வாவுடன் பானா காத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன்பிறகு இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு பிரபல நடிகரான நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். நாக சைத்தன்யா வேறு யாரும் இல்லை. நடிகர் நாக அர்ஜுன் மற்றும் நடிகை அமலாவின் மகன் தான். நடிகை அமலா கூட, நாக அர்ஜூனை மணந்த பின்னர் படங்களில் நடிக்கவில்லை. இன் நிலையில், அதே சட்டத்தை நாக சைத்தன்யாவின் குடும்பத்தினர் சமந்தாவுக்கும் போட்டுள்ளார்கள். கடந்த 4 வருடங்களாக பிள்ளை கூட பெற்றுக் கொள்ளாமல் சமந்தா இருந்துள்ளார். அதில் அவருக்கு ஆர்வம் இல்லையாம்… மேலும் …

படங்களில் நடித்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் பெரும் சர்சை தோன்றி இறுதியாக தனது காதல் கணவர் நாக சைத்தன்யாவை பிரிவதாக அவர் சமூக வலையத் தளங்கள் மூலம் அறிவித்தார். இதனை அடுத்து வேறு வழி இன்றி, நாக சைத்தன்யாவும் அறிவித்தார். இந்த நிலையில் ஐந்தே நாட்களில் நான்காவது திருமண நாளை கொண்டாட உள்ள இந்த தம்பதியினர் கருத்து வேறுபாட்டின் அடிப்படையில் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக உறுதியாகியுள்ளது. தற்போது விவாகரத்துக்குப் பிறகு நாக சைதன்யா, சமந்தாவிற்கு 200 கோடி ஜீவனாம்சம் வழங்க முன் வந்ததாகவும் அதை சமந்தா ஏற்க மறுத்துள்ளதாகவும் அதிர்வு இணையம் அறிகிறது.

நாகசைதன்யாவின் ஒரு பைசா கூட தனக்கு தேவையில்லை என்றும், தன்னுடைய உழைப்பே போதும். அத்துடன் நான் தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து நடிப்பேன் என்று சுயமரியாதையுடன் தன்னுடைய விவாகரத்து குறித்து முடிவெடுத்துள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் நாக சைதன்யா சமந்தா விவாகரத்து குறித்த செய்தி தான் வலம் வந்து கொண்டிருக்கிறது.

Contact Us