கோபித்துக்கொண்டு மெரினாவுக்கு வந்த 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வியாபாரி..!

சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த செய்த பானிபூரி வியாபாரி கைது

 

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரது பெற்றோர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்ததில் அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

அதனையறிந்து பேரதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் செஞ்சி பகுதி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாவது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டில் கோபித்துக்கொண்டு சிறுமி சென்னைக்கு வந்துள்ளார்.

சென்னையில் சிறுமிக்கு யாரும் தெரியாததால் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். இரவு நேரம் என்பதால் அங்கு ஏதாவது ஒரு இடத்தில் உறங்கிக்கொள்ளலாம் என்று ஒதுங்கிய சிறுமியை பானிபூரி விற்பவர் ஒருவர் பார்த்துவிட்டார். அப்போது சிறுமியிடம் சென்று பேசியபோது, குடும்ப தகராறில் கோபித்து இங்கு வந்துவிட்டதாக சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து சிறுமிக்கு சென்னையில் யாரும் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட பானிபூரி விற்பவர் அவருக்கு அடைக்கலம் கொடுப்பதாக நடித்து பின்னர் ஆசை வார்த்தைக்கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் சிறுமி மீண்டும் விழுப்புரத்துக்கு வந்துள்ளார். சென்னையில் தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவிக்க பயந்த சிறுமி அப்படியே இருந்துள்ளார். இந்த நிலையில்தான் அவர் வயிற்றில் கரு வளர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

அந்த சம்பவம் மெரினா பகுதியை நடந்ததால் வழக்கை திருவல்லிக்கேணி மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், பானிபூரி காரரின் அங்க அடையாளங்களை சிறுமியிடம் போலீசார் விசாரித்து வந்தனர். அதன்பேரில் திரிசூலம் பகுதியைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி ஆறுமுகத்தை (22) போலீசார் கைது செய்து அவர் மீது போக்சோ வழக்கை பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

 

Contact Us