பார்ட்டி நடந்த வீட்டின் அருகே சுட்டுக்கொல்லப்பட்ட நபர்.. லண்டனில் அதிர்ச்சி சம்பவம்..!!

 

தெற்கு லண்டனில் உள்ள Croydon- என்ற பகுதியில் உள்ள Birdhurst சாலையில் இருக்கும் வாகனம் நிறுத்திமிடத்தில், நேற்று முன்தினம் அதிகாலையில் ஒரு நபர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று, உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பியிருக்கிறார்கள்.

இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த நபர் இறந்து கிடந்த இடத்தின் அருகே இருக்கும் ஒரு குடியிருப்பில் பார்ட்டி நடந்திருக்கிறது. அதில் விருந்தினர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். அமைதியாக அந்த பார்ட்டி நடந்திருக்கிறது என்று காவல்துறையினர் நம்புகிறார்கள்.

எனவே, அந்த பார்ட்டியில் பங்கேற்றவர்களிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர். அவர்கள், அந்த சம்பவத்தை பார்க்கவில்லை என்றாலும், அந்த இடத்தில் இருந்த அனைவரும் காவல்துறையினரை, அணுகுமாறு, கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட, நபரின் பெயர் Leroy Mitchell, என்று தெரியவந்துள்ளது. அவர் உயிரிழந்த செய்தியை அறிந்தவுடன் அவரின் குடும்பத்தினர் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us