கனடாவில் முன்னாள் காதலரால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: உறவினர்கள், நண்பர்களின் நெகிழ்ச்சி செயல்

 

கனடாவின் ஆல்பர்ட்டாவில் 5 மாதங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் நினைவாக அவரது நண்பர்களால் பெஞ்ச் ஒன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இந்த சிறப்பு நினைவஞ்சலி கூட்டத்தில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ஆல்பர்ட்டாவின் Cremona பகுதியில் வசித்து வந்த 35 வயதான Brenda Ware என்பவரே 5 மாதங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டவர். சிகையலங்கார கலைஞரான இவரது சடலம் கடந்த மே 6ம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரேடியம் பகுதியில் பிரதான சாலையருகே கண்டெடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் 41 வயதான Philip Toner என்பவர் கைது செய்யப்பட்டதுடன் அவர் மீது கொலை வழக்கும் பதியப்பட்டது. Philip Toner கொல்லப்பட்ட பெண்மணியின் முன்னாள் காதலர் என்றே விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமது முன்னாள் காதலிகள் மீது Philip Toner கொடூரமாக நடந்து கொண்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதன் காரணமாக அவருக்கு பிணை அளிப்பதில் தாமதமாவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், Brenda Ware நினைவாக அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூடி, அவரது பெயர் பொறிக்கப்பட்ட பெஞ்ச் ஒன்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்துள்ளனர்.

Contact Us