அமெரிக்காவில் இடம்பெற்ற கடல் நீரை மேகம் உறிஞ்சும் அற்புதக் காட்சி

 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடலிலிருந்து மேகம் நீரினை உறிஞ்சும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

புளோரிடாவில் உள்ள லேக் ஒர்த் கடலில் நேற்று மாலை மேகமூட்டமாக காட்சியளித்தது. அடுத்த சில வினாடிகளில் மேகம் சுழற்காற்று போல சுழன்று கடல் நீரை மேலே இழுத்து. இந்த காட்சியை திடீரென கண்டா கடற்கரையில் இருந்து மக்கள் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தோடு கண்டனர்.

மேலும் பலர் அந்த காட்சியை புகைப்படமும் எடுத்தனர். இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, கடலின் மேல் காற்று சற்று குளிர்ந்ததாகவும், கடலின் காற்று சற்று வெப்பமானதாகவும் இருந்தால் இது போன்ற நிகழ்வுகள் நிகழும் என தெரிவித்தனர்.

Contact Us