ரொறன்ரோவில் ஓடும் பேருந்தில் நடுங்க வைக்கும் சம்பவம்: இளைஞர் கவலைக்கிடம்

 

ரொறன்ரோவில் ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைதாகியுள்ளார்.

ரொறன்ரோவில் நார்த் யார்க் பகுதியில் சனிக்கிழமை மதியத்திற்கு மேல் இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. கீல் தெரு மற்றும் வில்சன் அவென்யூ பகுதியில் இருந்து சனிக்கிழமை 2.14 மணிக்கு ஓடும் பேருந்தில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் பொலிசார் தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் தரப்பு TTC பேருந்து ஒன்றில் ரத்தவெள்ளத்தில் இளைஞர் ஒருவரை மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த இளைஞரை மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ அவசர மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு பிறகே இச்சம்பவத்தின் பின்னணி வெளிவரும் என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Contact Us