“சொல்லி கொடுப்பது போல மாணவிகளை கிள்ளி… ” -பள்ளியில் நடந்த பாலியல் கொடுமை

 

இரு மாணவிகளை அந்த பள்ளியின் நிர்வாகி பாலியல் கொடுமை செய்ததால் போலீசார் அவரை தேடி வருகின்றனர் குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் ஒரு தனியார் ஆங்கில பள்ளி உள்ளது .இந்த பள்ளியின் நிர்வாகி அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு மாணவிகள் அவர் மீது புகாரளித்தனர் .

அந்த பள்ளியில் நடந்த ஆங்கில எக்ஸாமில் 14 வயதான இரண்டு மாணவிகள் ஸ்பெல்லிங் தவறாக எழுதியுள்ளனர் .இதை பார்த்த அந்த பள்ளியின் நிர்வாகி அந்த மாணவிகளை தன்னுடைய ரூமிற்கு கூப்பிட்டார் .பின்னர் அந்த மாணவிகளுக்கு ஸ்பெல்லிங் சொல்லித்தருவது போல அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .அதனால் அந்த மாணவிகள் அவரிடமிருந்து தப்பி வீட்டிற்கு வந்துள்ளனர் .மேலும் இந்த விஷயத்தை தங்களின் பெற்றோரிடம் கூறினர் .

அதை கேட்டு கொதித்த அந்த பெற்றோர் அந்த மாணவிகளை அழைத்து கொண்டு அங்குள்ள காவல் நிலையத்தில்அந்த ஸ்கூல் நிர்வாகி மீது புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பள்ளி நிர்வாகியைத் தேடி அந்த பள்ளிக்கு சென்றனர் .ஆனால் அங்கு அவர் போலீஸ் வருவதை அறிந்து அங்கிருந்து தப்பி சென்று விட்டார் .போலீசார் அந்த பள்ளியில் விசாரித்த போது அவர் ஏற்கனவே இதே போல பல மாணவிகளிடம் நடந்து கொண்டதை அறிந்தனர் .அதனால் அவரை கைது செய்ய தேடி வருகின்றனர் .

Contact Us