“அடப்பாவி நிர்வாணமாக்கி நிம்மதியில்லாம செஞ்சிட்டியே” -ட்யூஷன் வராத மாணவிக்கு நேர்ந்த கொடுமை

 

கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியீடு; ஆந்திர பேராசிரியர் கைது

கர்நாடக மாநிலம் மங்களூரு பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி பி.எச்.டி படித்து வந்தார். அவர் ஆந்திர மாநிலத்தின் ஆச்சாரியா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள சுதீர்குமார் என்பவரிடம் ட்யூஷன் படித்து வந்தார் .

அவரது வழிகாட்டுதலின்பேரில் படிப்பை தொடர்வதற்காக மங்களூரு பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வறிக்கையை அந்த மாணவி சமர்ப்பித்தபோது , பேராசிரியர் அதற்கான தகுதி பெற்றவர் அல்ல என்று கூறி அனுமதி வழங்க மங்களூரு பல்கலைக்கழகம் மறுத்து விட்டது.

அதனால் அந்த மாணவி அந்த சுதிர்குமாரை விட்டு வேறொரு ஆசிரியரிடம் படிக்க ஏற்பாடு செய்து வந்தார் .அதன் பிறகு இதை கேள்விப்பட்ட அந்த சுதிர் அந்த மாணவியை தொடர்புகொள்ள முயற்சித்தார் ,ஆனால் அந்த மாணவி அவரை உதாசீனப்படுத்தி அவரின் போனை கூட எடுக்கவில்லை .

இதனால் அந்த பேராசிரியர் கடும் கோபம் கொண்டு அந்த மாணவியின் குடும்பத்தை மிரட்டினார் .. மேலும் அந்த மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து அதை சமூக ஊடகத்தில் வெளியிட்டார் .அதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இந்த ஆபாச படம் குறித்து மங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மங்களூரு சைபர் கிரைம் போலீசார் சுதீர்குமாரை கைது செய்து,அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

Contact Us