காட்டுக்குள் போதையில் கிடந்த சிறுவர்கள் – சிறுமிகள்

 

காட்டுக்குச் சென்று மது அருந்திவிட்டு போதையில் உல்லாசம் அனுபவித்துவிட்டு போதை தெளியாமல் அங்கேயே படுத்துக் கிடந்து இருக்கின்றனர். இதனால் அவர்கள் போலீசில் சிக்கி இருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்தில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூர் அருகே இருக்கும் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி குருபரா சிலிம்பி குட்டே. இது காட்டுப் பகுதியாகும். இந்த காட்டுப் பகுதியில் 16 வயது நிரம்பிய இரண்டு சிறுமிகளும் , 17 வயது நிரம்பிய இரண்டு சிறுவர்களும் சென்றிருக்கிறார்கள். இந்த 4 பேரும் காதலர்கள் . இரண்டு ஜோடிகளும் மது அருந்திவிட்டு உல்லாசம் அனுபவிக்கலாம் என்று அந்த காட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

அதன்படியே மது அருந்திவிட்டு உல்லாசமாக இருக்கிறார்கள். ஆனால் போதை தெளியாததால் அங்கேயே போதையில் தூங்கி இருக்கிறார்கள். இதுபற்றி அறிந்த பஜ்ரங்தள அமைப்பினர் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 சிறுமிகளையும் பிடித்து விசாரித்து , பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். பெற்றோருக்கும் சிறுமிகளுக்கும் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்துள்ளனர் போலீசார். சிறுவர்கள் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்கின்றனர்.

சிறுவர், சிறுமிகள் இப்படி மதுபோதையில் காட்டுக்குள் சென்று உல்லாசம் அனுபவித்த செய்தி மங்களூரு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Contact Us