மீண்டும் சீண்டிய சீனா; தைவான் பதில் நடவடிக்கையால் பெரும் பதற்றம் நிலவுகிறது !

சீனா, தான் இருப்­பதை தைவா­னுக்கு நினை­வூட்­டும்­ வி­த மாக அடிக்­கடி போர் விமா­னங்­களை அனுப்பி வரு­கிறது. சனிக்­கி­ழமை அன்று தைவான் வான்­வெ­ளி­யில் 39 சீன கடற்­படை விமா­னங்­கள் ஊடு­ரு­விச் சென்­றன. ஆத்­தி­ர­ம­டைந்த தைவான், பதி­ல­டிக்­குத் தயா­ரா­னது. இத­னால் சீனா­வுக்­கும் தைவா­னுக்­கும் இடையே பதற்­றம் அதி­க­ரித்­தது.தைவா­னில் ஜன­நா­யக முறை­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சாங்­கம் ஆட்சி நடத்தி வரு­கிறது. ஆனால் தன்­னு­டைய நாட்­டின் ஒரு பகு­தி­தான் தைவான் என்று சீனா தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கிறது.

இந்­நி­லை­யில் கடந்த ஓராண்டு கால­மாக தன்­னு­டைய வான்வெ­ளி­ யில் சீன விமா­னங்­கள் அத்­து­மீ­று­வது அதி­க­ரித்­துள்­ள­தாக தைவான் தற்­காப்பு அமைச்சின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார்.சீனா­வின் 39 விமா­னங்­கள் நுழைந்­த­தும் அதற்கு எதி­ராக போர் விமா­னங்­கள் இரண்டு அலை­ களாக பிரித்து அனுப்பி வைக்­கப்­பட்­ட­தாகவும் சீன விமா­னங்­களை எச்­ச­ரிக்­கும் வகை­யில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக ஏவு­க­ணைத் தற்­காப்பு சாத­னங்­க­ளை­யும் தைவான் ஆயத்­தப் ­ப­டுத்­தி­யிருந்தது.சனிக்­கி­ழமை அன்று பக­லில் இரு­பது சீன விமா­னங்­கள் அத்­து­மீறி நுழைந்­த­தா­க­வும் பின்­னர் அன்று இரவு 19 சீன விமா­னங்­கள் ஊடு­ரு­வி­ய­தா­க­வும் தைவான் தற்­காப்பு அமைச்சு மேலும் கூறி­யது. பெரும்­பா­லான சீன விமா­னங்­கள் ஜே௧6, எஸ்யு௩0 ரக போர் விமா­னங்­க­ளா­கும்.

Contact Us