ஒரே நாளில் 7 பில்லியன் $ இழந்த பேஸ் புக்- இயந்திரத்தை நம்பி மனிதர்களை வேலையால் நிறுத்தியதால் வந்த வினையை பார்த்தீர்களா ?

நேற்றைய தினம் சுமார் 6 மணி நேரமாக பேஸ் புக், வாட்ஸ் அப் போன்ற செயலிகள், செயல் இழந்தது. இதனை அடுத்து உலகம் முழுவதிலும் இன்ரர் நெட்டை பாவிக்கும் எந்த ஒரு வாடிக்கையாளரும் பேஸ் புக்கை பார்க்க முடியவில்லை. இதனால் பங்குச் சந்தையில் பேஸ் புக் குழுமத்தின் பெறுமதி வெகுவாக சரிந்து, குறித்த கம்பெனி மேல் உள்ள நம்பிக்கையை மக்கள் இழந்துள்ள நிலையில். அந்தக் குழுமம் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளது என அறியப்படுகிறது. இது ஒன்றும் ஹக்கர்கள் வேலை இல்லை. இதில் எந்த நாசகார சதியும் இல்லை. பேஸ் புக் தலைமையகத்தில் உள்ள சேவரில் ஏற்பட்ட பிழை தான் காரணம். மேலும் சொல்லப் போனால் அதனை திருத்த அங்கே எவரும் இல்லை என்பது அடுத்த வெக்கக்கேடான விடையம்… காரணம்…

அனைவரும் வீட்டில் இருந்தபடி வேலை செய்து கொண்டு இருந்த நிலையில். சேவரில் ஏற்பட்ட பிழையக் நிவர்த்தி செய்ய அங்கே யாரும் இருக்கவில்லை. இறுதியாக டாக்ஸ்சியை பிடித்துக் கொண்டு பல ஐ.டி நபர்கள் தலைமை நிலையத்தை நோக்கி விரைந்து சென்று, அங்கே பழுது பார்த்து, அதனை நிவர்த்தி செய்து மீண்டும் இயங்க வைக்க, சுமார் 6 மணி நேரம் பிடித்துள்ளது. பேஸ் புக், சமீபத்தில் பலரை வேலையில் இருந்து தூக்கியது. பின்னர் வீட்டில் இருந்து வேலை செய்தால் போதும் என்று கூறி. அவர்களின் சம்பளத்தையும் குறைத்தது. இதன் காரணத்தால் தலைமை நிலையத்தில் கூட பிழைகளை நிவர்த்தி செய்ய ஆட்கல் இல்லை. இந்த ஆட் குறைப்பே தற்போதைய நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆட்குறைப்பால் மார்க் சூட்பேர்க்(முதலாளி) 7 பில்லியனை மிச்சம் பிடித்திருக்க முடியாது. ஆனால் ஒரே நாளில் 7 பில்லியன் டாலரை அவர் இழந்துள்ளார் என்பது தான் அதிர்ச்சியான தகவல்.  இயந்திரங்கள், சாப்ஃட் வேர் மற்றும் றோபோக்களை நம்பி மனிதர்களை வேலையால் நிறுத்திவரும் கம்பெனிகளுக்கு இது ஒரு சரியான பாடமாக அமைந்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

Contact Us