ஓசியில் சிகரெட் தராததால் பெட்டிக்கடை பெண்ணை அடித்துக்கொன்ற வாலிபர்

 

ஓசியில் சிகரெட் தராததால் பெட்டிக்கடை பெண்ணை சாலையில் இழுத்துப்போட்டு அடித்தே கொலை செய்திருக்கிறார். இந்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் துவாரகா பகுதியில் அரங்கேறியிருக்கிறது.

துவாரகா பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றுக்கு சென்ற அந்த வாலிபர், பணம் தராமல் சிகரெட் கேட்டிருக்கிறார். அந்த கடையில் இருந்த பெண், சிகரெட்டை கையில் வைத்துக்கொண்டு பணம் கேட்டிருக்கிறார். அதன்பின்னர் தன் சட்டைப்பையில் இருந்து எடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், ஒரு சிகரெட்டுக்காக பணம் அவர் பையில் இல்லை என்பதை புரிந்துகொண்டார் அந்தப்பெண்.

இதனால் சிகரெட்டை எடுத்து பெட்டியில் போட்டுவிட்டார். அந்த நபர் மீண்டும் மீண்டும் சிகரெட் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்.

ஓசியில் தரமுடியாது என்று அந்தப்பெண் சொல்ல, தன்னிடம் சில்லரை இருக்கிறது என்று சொல்ல, அந்த சில்லரை சிகரெட் வாங்குறதுக்கு தாது என்று பெண் சொல்ல, வாக்குவாதம் நீடித்துக்கொண்டே போயிருக்கிறது. இதில் ஆத்திரப்பட்ட அந்த நபர் அந்தப்பெண்ணை தரக்குறைவாக பேச, பதிலுக்கு அந்தப் பெண்ணும் பேச, அந்தப்பெண் மீது அடித்துவிடுகிறார்.

அத்தோடு இல்லாமல் மீண்டும் மீண்டும் அடிக்க முயற்சிக்க, அந்த பெண் தடுக்க முயற்சிக்க, ஆவேசம் கொண்ட அந்த நபர் பலமாக அடித்ததில் சுருண்டுவிழுந்து அந்தப்பெண் உயிரிழந்துவிட்டார்.

இந்த கொடூரத்தை பார்த்ததும் அப்பகுதியினர் ஓடிவந்த அந்த வாலிபரை அடித்து துவைத்துவிட்டனர். அதற்குள் தகவலறிந்து போலீசார் வந்துவிட, அவர்கள் அந்த நபரை பிடித்து விசாரித்தபோது, ராஜ்புரியை சேர்ந்த திலீப் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகிவிட்டதால் அந்த வீடியோவெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Contact Us