சீனா அரசின் விதிமுறையால்…. தப்பி ஓடி வந்த ஏற்பாட்டாளர்…. கோபத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்….!!

 

பிரித்தானியா இளவரசர் வில்லியம் கல்லூரி படித்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் ஃபேஷன் ஷோவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே அனைவரையும் ஈர்க்கும் விதமாக ஒரு பெண் மெல்லிய உடையணிந்து அழகுற நடந்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை கண்டு வில்லியம் மயங்கி காதலில் விழுந்துவிட்டார். குறிப்பாக அந்த பெண் வேறு எவருமில்லை இளவரசி கேட் தான். அதுவும் முதலில் அவர்களின் காதல் மோதல், பிரிவு என பலவற்றை சந்தித்த போதிலும் இறுதியாக வென்றது. இவர்கள் இருவரும் தற்பொழுது இல்லற வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க உதவியவர் Jake Hall ஆவார். ஏனெனில் இவர் தான் அந்த ஃபேஷன் ஷோவை ஏற்பாடு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவருக்கு தற்போது ஒரு பெரிய இன்னல் ஏற்பட்டுள்ளது. அதாவது Jake கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சீனாவில் டியூஷன் சென்டர் ஒன்றை நிறுவியுள்ளது. ஆனால் சீனா அரசின் விதிமுறைகள் படி அயல்நாட்டவர்கள் எவரும் பணியமர்த்த தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த சென்டரை இனிமேல் சீனாவில் தொடர்ந்து நடத்த இயலாது என்பதால் Jake அவசரமாக பிரித்தானியா தப்பி ஓடி வந்துள்ளார்.

அதிலும் அந்த சென்டரில் பயிலும் மாணவர்கள் ஒரு மில்லியனுக்கு அதிகமாக கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் Jake அங்கிருந்து தப்பி வந்துவிட்டதால் கட்டணம் செலுத்திய மாணவர்களும் சம்பளம் கிடைக்காத ஆசிரியர்களும் அவர் மீது ஆத்திரத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து Jake மீது உள்ளூர் காவல்துறையினரிடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர். அதிலும் இளவரசரை அவரது காதலியுடன் சேர்த்து வைத்தவருக்கு இந்த கதி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us