‘ஆப்கான் அகதிகள் வேண்டாம்’…. உணவகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

 

பிரித்தானியாவில் உள்ள Scarboroughவில் இருக்கும் Grand Hotelக்கு நேற்று காலை 10.15 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் உணவகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் அச்சமடைந்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உணவகத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த ஊழியர்களையும் அதற்கு அருகிலிருந்த விடுதியில் தங்கியிருந்தவர்களையும் அவசரமாக அப்புறப்படுத்தினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உணவகத்தை சோதனையிட்டனர். ஆனால் அங்கு எந்தவொரு வெடிகுண்டும் இல்லை என்று நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதன் பிறகே ஊழியர்களும் அங்கிருந்த விடுதியில் தங்கியிருந்தவர்களும் உள்ளே சென்றனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 150 பேரும் ஆப்கான் அகதிகள் ஆவர்.

குறிப்பாக உள்ளூர் மக்களுக்கு ஆப்கான் அகதிகளை தங்க வைக்க விருப்பமில்லை. மேலும் அவர்கள் ‘ஆப்கான் அகதிகள் வேண்டாம்’ என்ற கையால் எழுதப்பட்ட காகிதங்களை அனைவரின் வீட்டு வாசலிலும் போட்டுள்ளனர். இதற்கு பிறகு தான் உணவகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us