பிரித்தானியாவை போலவே கனடாவிலும் ட்ரக் சாரதிகள் பற்றாக்குறை… என்ன காரணம்?

 

பிரித்தானியாவில் எப்படி ட்ரக் சாரதிகள் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உள்ளதோ, அதேபோல் கனடாவிலும் ட்ரக் சாரதிகள் பற்றாக்குறை காணப்படுகிறது. பிரித்தானியாவில், பிரெக்சிட் பிரச்சினை, கொரோனாவின் தாக்கம், சாரதிகளுக்கு வயதாவதால் பணியிலிருந்து ஓய்வு பெறுதல் மற்றும் மோசமான பணிச்சூழல் ஆகியவை ட்ரக் சாரதிகள் பிரச்சினையின் பின்னணியில் உள்ளன.

கனடாவைப் பொறுத்தவரை அங்கும் கிட்டத்தட்ட அதே நிலைமைதான்… பிரெக்சிட்டைத் தவிர மற்ற அனைத்துப் பிரச்சினைகளும் கனடாவிலும் காணப்படுகின்றன. 2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கனடாவில் சுமார் 18,000 சாரதிகள் பணிகள் காலியாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 2025 வரை, ஆண்டொன்றிற்கு கனடாவுக்கு 17,230 சாரதிகள் தேவைப்படுகிறார்கள்.

கனடாவைப் பொருத்தவரை சாரதிகள் பற்றாக்குறைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அதன் ட்ரக் சாரதிகளில் 31 சதவிகிதம் பேர் குறைந்தபட்சம் 55 வயதுடையவர்கள். ஆக, அவர்களும் ஓய்வு பெறும் பட்சத்தில் காலியிடங்கள் அதிகமாகிவிடும்.

இந்த பிரச்சினையைத் தீர்க்க கனடா இளைஞர்கள், பெண்கள், புலம்பெயர்ந்தோர் ஆகியோரை ட்ரக் சாரதிகளாக பணிக்கமர்த்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதில், இளைஞர்களைப் பொருத்தவரையில், அவர்களால் தொடர்ந்து ட்ரக் ஓட்ட இயலவில்லை. அது கடினமாக உள்ளது. இன்னொரு பக்கம் ட்ரக் ஓட்டுவதற்கான பயிற்சி மற்றும் ஓட்டுநர் உரிமத்துக்காக 60,000 முதல் 70,000 டொலர்கள் வரை செலவாவதால், இளைஞர்கள் அந்த பணியைத் தேர்ந்தெடுக்க யோசிக்கிறார்கள்.

ஆகவே, எதற்கு இந்த வேலை என யோசிக்கிறார்கள் மக்கள்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், பிரித்தானியாவில் ஏற்பட்ட நிலைமை கனடாவிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்சம் வேறு நிலவ, நிறுவனங்கள் எப்படியாவது காலியிடங்களை நிரப்ப முயன்று வருகின்றன.

Contact Us