பிக்பாஸ் சீசன் 5 யில் ஜேர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண்!

 

தமிழகத்தில் பிரபல்யமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது.

இந்நிகழ்ச்சி 4 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நேற்று ஞாயிற்றுகிழமை (04) விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகத் தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் வழக்கம்போல உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் (Kamal Hassan) தொகுத்து வழங்கிவருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இம்முறை 18 போட்டியாளர்கள் பங்கெடுத்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே இதுவரை இல்லாத அளவில் முதன்முறையாக நமீதா மாரிமுத்து என்ற திருநங்கை பங்கேற்றுள்ளார். இதேவேளை ஜேர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண் மாடல் அழகியான மதுமிதா (Mathumitha Raghunathan) (ஆடை வடிவமைப்பாளர்) என்பவர் பங்கேற்றுள்ளார்.

Contact Us