ஓடும் பேருந்தில் பயங்கரம் – இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொன்ற இளைஞர்

 

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொன்ற சம்பவத்தால் பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடியிருக்கிறார்கள். கொலை செய்துவிட்டு யாரும் என் கிட்டே வராதீர்கள் என்று மிரட்டிக்கொண்டே சென்ற இளைஞர் கடைசியில் போலீசில் சிக்கியிருக்கிறார்.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் சிகோடி தாலுகா பகுதியில் சங்கேஷ்வர நகரிலிருந்து படா கிராமத்திற்கு அரசு பேருந்து ஆளூர் கேஎம் கிராமப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த பயங்கர சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

மங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் காம்ப்ளே(28) என்ற இளைஞர் அந்த பேருந்தில் சென்றுகொண்டிருந்திருக்கிறார். அதே பேருந்தில் படா கிராமத்தைச் சேர்ந்த வந்தனா(30)வும் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்தனா என்ற இளம் பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார் பிரவீன். இதில் அந்த பெண்ணின் கதறல் சத்தம் கேட்டு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி விட்டார் . பயணிகள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர்.

வந்தனாவை துடிதுடிக்க கழுத்தை அறுத்து கொன்ற பிரவீன், என்கிட்ட யாரும் வரவேண்டாம் என்று கத்தியை காட்டி எச்சரித்துக்கொண்டே சென்றிருக்கிறார். சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் சங்கமேஸ்வரர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் இருந்த பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில், வந்தனாவும் பிரவீனும் காதலித்து உல்லாசமாக இருந்து வந்ததாகவும், தற்போது திடீரென்று தன்னை விட்டு விலகி சென்று வேறு ஒருவரிடம் வந்தனா உறவு வைத்திருந்ததாகவும், இதனால் கோபத்தில் இருந்த தான் அந்த உறவை துண்டித்து விடும்படி எத்தனையோ முறை சொல்லி பார்த்தும், வந்தனா கேட்கவில்லை என்பதால்தான் ஆத்திரத்தில் அவர் கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று போலீசாரிடம் அவர் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து சண்டிகேஸ்வரர் போலீசார் பிரவீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Contact Us