குடும்ப தகராறில் மனைவி வெட்டிக்கொலை – கணவர் கைது

 

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் புதுப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ஜலீல். இவர் பாக்கு மட்டையால் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ஜரினா. இவர் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் மீன் சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.இதனிடையே, மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஜலீல், நாள்தோறும் குடித்துவிட்டு சென்று மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று வழக்கம்போல் வீட்டிற்கு மதுபோதையில் வந்த ஜலீல், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜலீல் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, ஜரினாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஜரினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, ஜலீலை கைது செய்தனர்.

Contact Us