மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை… கணவர் வெறிச்செயல்!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ் பூங்குருதியை சேர்ந்தவர் கதிரேசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி பாரதி (26). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், பாரதிக்கு, அதே பகுதியை சேர்ந்த உறவினர் ரகுபதி என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை கணவர் கதிரேசன் கண்டித்துள்ளார். இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதி, கணவரை பிரிந்து ரகுபதியுடன் சென்று தனியே வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று குடும்பத்தினர் மூவரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, பாரதி, கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து, ரகுபதியுடன் வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனால், ரகுபதி தனது உறவினர்களுடன் அவரை வாகனத்தில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கதிரேசன் மற்றும் அவரது உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்று, ரகுபதியை வழிமறித்து சராமாரியாக தாக்கி உள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், ரகுபதியின் உறவினரான சின்ன திம்மராயன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தவலின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், ரகுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கதிரேசன் உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Contact Us