தைவான் வான் பரப்பில் சீன போர் விமானங்கள் ஊடுருவிய விவகாரம் ; அமெரிக்க இராணுவ வலிமைக்கு சவால் விடும் செயல் என தகவல்

தைவான் வான் பரப்பின் மீது சீன போர் விமானங்கள் தொடர்ந்து 4 நாட்கள் ஊடுருவியது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ வலிமைக்கு சவால் விடும் செயல் என்று கருதப்படுகிறது.தைவான் அருகே உள்ள கடல் பகுதியில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போர் கப்பல்கள் பயிற்சிக்காக திரண்டுள்ள சமயத்தில். சீன விமானங்கள் தைவான் வான் பரப்பில் அத்துமீறி ஊடுருவின.

தனது ராணுவ பலத்தை பயன்படுத்தி தைவானை கைப்பற்றினால், தைவானுக்கு ஆதரவாக எந்த நாடும் முன்வரக் கூடாது என்பதை உணர்த்தும் விதமாக சீனா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அதே சமயம், சீனாவில், பணவீக்கம் உயர்வு, மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகள் நிலவி வரும் சூழலில் மக்கள் கவனத்தை திசை திருப்பும் முயற்சி இது என்றும் விமர்சிக்கப்படுகிறது.

Contact Us