டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதன் எதிரொலி ; பால், பெட்ரோல், இறைச்சி, மருந்துக்குத் தட்டுப்பாடு

இங்கிலாந்தில் டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், பால், பெட்ரோல், மருந்து, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகியதால் வெளிநாட்டவரை டேங்கர் லாரி ஓட்டுநர்களாக நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கனரக லாரி ஓட்டுநர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து பெட்ரோல் பங்குகளுக்கு டேங்கர் லாரிகளில் பெட்ரோல் எடுத்து செல்லும் பணிகளில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். இருந்தபோதும் 22 சதவீத பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளதால் எஞ்சிய பங்குகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் நிரப்பிச் செல்கின்றனர். 10 நாட்களில் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Contact Us