லண்டனில் வாழ முடியுமா ? எப்படி எல்லாம் விலை ஏறி உள்ளது என்பது தெரியுமா தமிழர்களே ?

வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல கட்டம் கட்டமாக அனைத்து பொருட்களும் விலை ஏறி விட்டது. இதனை பலர் கவனிக்க தவறி விட்டார்கள். அரசாங்கம் விதித்து வரும் மேலதிக வரிகளே இதற்கு காரணம். நாம் எம்மை அறியாமலே பாதிக்கபடுகிறோம். எதில் எல்லாம் விலை எகிறியுள்ளது என்று பார்போமா … ? கடந்த வருடம் சாதாரணமாக ஒரு சிறியரக குடும்ப காருக்கு பெற்றோல் புல் டாங் அடிப்பது என்றால் 58 பவுண்டுகளாக இருந்தது(சராசரி) ஆனால் இன்று 70 பவுண்டுகள் செலவு செய்யவேண்டி உள்ளது. இதேவேளை பாவித்த ஒரு போட் போக்கஸ் காரின் விலை 9000 பவுண்டுகளாக இருந்து, தற்போது 10,000 பவுண்டுகள் ஆகிவிட்டது. சுருக்கமாக சொல்லப் போனால் பாவித்த கார்களின் விலை அதிகரித்துள்ளது. காரணம் மக்கள் புது கார்களை வாங்கவில்லை. குடும்பத்தில் 4 பேர் சென்று சாதாரண ஒரு உணவகத்தில் சாப்பிட. சராசரியாக 55 பவுண்டுகளை செலவு செய்வார்கள். ஆனால் அது தற்போது 65 பவுண்டுகள் ஆகியுள்ளது…மேலும்..

நாய் குட்டி பூனைக் குட்டியின் உணவில் கூட விலை ஏறி விட்டது. அது போக ரயில் டிக்கெட்டுகள் விலை உயர்ந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்னர் லண்டனில் இருந்து போத்துக்கல் நாட்டுக்கு செல்ல 100 பவுண்டுகள் பிடித்தது. ஆனால் தற்போது 180 பவுண்டுகள் சார்ஜ் செய்கிறது ஏர் லைன்ஸ். இப்படி லண்டனில் அனைத்து பொருட்களின் மற்றும் சேவைகளின் விலை பன் மடங்காக அதிகரித்து உள்ளது. இதனை எம்மில் பலர் கவனிக்க தவறி இருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆங்கில ஊடகம்.

Contact Us