“அடிப்பாவி குழந்தையோடவா இந்த வேலை செய்வே “நள்ளிரவில் குழந்தைகளோடு பிடிபட்ட பெண்.

 

குழந்தைகளை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மஞ்சுநாத் லே-அவுட்டில் ஒரு பெண் குழந்தையோடு சென்று பகல் நேரத்தில் நகரில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிடுவார். பிறகு அங்கு வசிப்பவர்களில் வெளியூருக்கு சென்றிருப்பவர்களை கண்டுபிடித்து , அதுபற்றி கணவரிடம் கூறுவார்.அதன் பிறகு இரவு நேரத்தில் அந்த குழந்தைகளோடு சென்று அந்த நோட்டமிட்ட வீட்டில் அந்த தம்பதி திருடி வந்தனர் .பொதுமக்களிடம் பிடிபட்டால் தாங்கள் குழந்தை குட்டி காரர்கள் என்று கூறி தப்பிவிடுவார்கள்

இந்நிலையில் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் விஜயலட்சுமி, கடந்த செப்டம்பர்16-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் விஜயலட்சுமி வீட்டுக்கதவை உடைத்து நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர். அதன் பிறகு அவர் போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்த போது இந்த குற்றத்தை செய்தது அந்த குழந்தைகளோடு வந்து திருடும் தம்பதிகள் என்று போலீஸ் கண்டுபிடித்து,அவர்களை கைது செய்தது
பிறகு கைதான தம்பதியிடம் இருந்து ரூ.8½ லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
அந்த தம்பதியிடம் இருந்து 6 மாத குழந்தை உள்பட 4 குழந்தைகள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்..

Contact Us