OTT தளம் தொடங்கும் பிரபல தொலைக்காட்சி.? வெளியான சூப்பர் தகவல்…!!!

 

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகாமல் இருந்தன. அந்த சமயத்தில் OTT தளங்களில் தான் பெரும்பாலான படங்களும், வெப் தொடர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதனையடுத்து, OTT தளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களும் அவர்களுக்கு என்று தனியாக OTT தளங்களை வைத்துள்ளனர். மேலும், சன் டிவி ‘சன் நெக்ஸ்ட்’ என்ற ஓடிடி தளத்தையும், விஜய் டிவி ‘ஹாட்ஸ்டார்’ மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி ‘ ஜீ 5’ என்ற ஓடிடி தளத்தையும் வைத்திருக்கின்றனர்.

அந்த வரிசையில், பிரபல கலைஞர் தொலைக்காட்சியும் தனியாக ஒரு ஓடிடி தளத்தை உருவாக்க உள்ளதாகவும், இந்த ஓடிடி தளம் மற்ற ஓடிடி தளங்களை காட்டிலும் மக்களுக்கு எளிதாக பயன்படும் வகையில் அமைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us