கனடாவில் பட்டப்பகலில் பள்ளிக்குள் கொடூர சம்பவம்: வெளிவரும் பகீர் தகவல்

 

நார்த் யார்க் பகுதியில் அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளிக்குள் மாணவர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட தகவலில், செவ்வாய்க்கிழமை பகல் 1.40 மணியளவில் பிரதானசாலை 401 அருகாமையில் அமைந்துள்ள George S. Henry Academy-ல் இருந்து பொலிசாருக்கு தகவல் சென்றுள்ளது.

தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், தாக்குதலுக்கு இலக்கானவரும் தாக்குதல்தாரியும் மாயமானதாக தெரிந்துகொண்டனர். இதனையடுத்து, துரித நடவடிக்கை முன்னெடுத்த பொலிசாருக்கு, கத்திக்குத்து காயங்களுடன் பள்ளி மாணவன் ஒருவன் சிகிச்சைக்காக மருத்துவமனை ஒன்றை நாடியதாக தகவல் கிடைத்தது.

இதனிடையே, குறித்த மாணவனின் காயங்களின் தன்மை காரணமாக உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர். முதற்கட்ட தகவலில், குறித்த மாணவனின் வயிற்றில் கத்தியால் தாக்கப்பட்டுள்ளதாகவே தெரிய வந்துள்ளது.

தாக்குதல்தாரியும் காயம்பட்ட மாணவரும் நன்கு அறிமுகமானவர்கள் எனவும், சுமார் 5.45 மணியளவில் தாக்குதலில் ஈடுபட்ட குறித்த மாணவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இதனிடையே, பொலிஸ் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்ட நிலையில், மாலை 4 மணியளவில் தாக்குதல் சம்பவம் நடந்த குறித்த பள்ளியில் இருந்து மாணவர்கள் அனைவரும் குடியிருப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Contact Us