இலங்கையில் முதன்முறையாக நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை

 

இலங்கையில் முதல் முறையாக அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் வெற்றிகரமாக வித்தியாசமான முறையில் சிறுநீரக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நோயாளியை மயக்கமாக்காமல் முதல் முறை சிறுநீரகத்தில் கல் அகற்றும் சத்திர சிகிச்சையே மேற்கொள்ளப்பட்டுள்ளதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் புதிய தொழில்நுட்ப இயந்திரத்தின் உதவியுடன் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் நோயாளியின் சிறுநீரகம் முழுவதும் பரவியிருந்த 5 சென்றி மீற்றர் அளவிலான கல் மற்றும் மேலும் சில சிறிய கற்கள் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன.

எனினும் நோயாளியை மயக்கமடைய செய்யாமல் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Us