கனடாவில் புத்த கோவில் மீது தாக்குதல்: இளைஞர்கள் இருவரின் புகைப்படம் வெளியானது

 

கனடாவில் தீ வைத்து தாக்குதல் முன்னெடுத்த சம்பவம் தொடர்பில் இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த இளைஞர்கள் புத்த கோவில் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளமை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

லாவல் பொலிசார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலின் அடிப்படையில், acob Cote(18) மற்றும் Mathieu Mongeau(21) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 28ம் திகதி குறித்த இளைஞர்கள் இருவரும் 5 இடங்களில் நெருப்பு வைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தொடர்புடைய பகுதியில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் 911 இலக்கத்திற்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும், புத்த கோவிலில் தாக்குதல் நடந்த போது 5 பிக்குகள் அந்த கோவிலுக்குள் இருந்ததாக தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த கோவிலின் ஒருபக்க வாசல் கதவு மற்றும் நாற்காலி ஒன்றும் தீக்கிரையாகியுள்ளது. பிக்குகள் காயங்களின்றி தப்பியுள்ளனர்.

Contact Us