2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது!

 

அரியலூர் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் திருமானுர் அடுத்துள்ள கோவிலூரை சேர்ந்தவர் அண்ணாத்துரை(54). கூலி தொழிலாளி. இவர், சம்பவத்தன்று வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 9 மற்றும் 6 வயது சிறுமிகளை தனது வீட்டிற்குள் அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதனை வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களது உறவினர்களிடம் கூறி அழுதுள்ளனர். இதனால், அதிர்ச்சிக்குள்ளான சிறுமிகளின் பெற்றோர், அண்ணாத்துரை மீது அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், கூலி தொழிலாளி அண்ணாத்துரை மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Contact Us