“என்னை காதலிச்சிட்டு இன்னொருத்தனோட எப்படி ….” காதலிக்கு ஓடும் பஸ்ஸில் நடந்த கொடுமை.

 

காதலை கை விட்ட காதலியை ஒரு காதலன் ஓடும் பஸ்சில் கழுத்து அறுத்து கொலை செய்தார் .

ஓடும் பஸ்சில் இளம்பெண்ணை கழுத்து அறுத்து கொன்ற கொடூரம்; காதலை கைவிட்டதால் அத்தை மகன் வெறிச்செயல்
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் உக்கேரி தாலுகா படா கிராமத்தை சேர்ந்த 30 வயதான வந்தனா, மங்கனூர் கிராமத்தை சேர்ந்த தனது அத்தை மகன் 28 வயதான பிரவீனை காதலித்து வந்தார்
மேலும் திருமணம் செய்யாமல் 2 பேரும் கணவர், மனைவி போல் ஒன்றாகவும் வாழ்ந்து வந்து உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் திடீரென்று பிரச்சினை உருவானதால் ,அந்த வந்தனா அந்த காதலனை விட்டு பிரிந்து சென்று விட்டார் .அதன் பிறகு அந்த வந்தனா வேறொரு நபரை காதலித்தார் .இதையறிந்த பிரவீன் அந்த வந்தனா மீது கோவமாக இருந்தார்

இந்த நிலையில் வந்தனா, கடந்த வாரம் ஒருநாள் பஸ்சில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பஸ்சில் ஏறிய பிரவீன், வந்தனாவின் அருகில் அமர்ந்தார். அதன் பிறகு வந்தனாவிடம் வேறொரு நபரோடு இருக்கும் காதலை கை விடுமாறு கேட்டார் .அதற்கு வந்தனா மறுத்ததும் ,கோவப்பட்ட பிரவின் ஒரு கத்தியை எடுத்து அந்த வந்தனாவை சரமாரியாக குத்தி கொலை செய்தார் .இதை பார்த்த பயணிகள் அலறியடித்து ஓடினார்கள் .பிறகு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காதலியை கொன்ற ப்ரவினை கைது செய்தனர்
கைதான பிரவீன் மீது சங்கேஸ்வரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஓடும் பஸ்சில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us