பல தலைமுறைகளின் சொகுசு வாழ்க்கைக்கான பணத்தை சேர்த்துள்ள நிரூபமா!

 

நிரூபமா ராஜபக்ஷ (Nirupama Rajapaksa) வெளிநாட்டில் திருட்டுத்தனமாகச் சேமித்து வைத்துள்ள 3 ஆயிரத்து 500 கோடி ரூபா விவகாரம் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. துஷார இந்துனில் (Thushara Indunil) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஒரு புறம் யொகானி என்ற பாடகி சர்வதேச அளவில் புகழ் பெற்றதையிட்டு நாம் மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்க இன்னொரு புறம் நிரூபமா ராஜபக்ச என்ற பெண்ணும் சர்வதேச அளவில் புகழ்பெற்றதையிட்டு இலங்கையராக நாம் வெட்கப்படுகின்றோம்.

இந்த ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நிரூபமா ராஜபக்ச என்பவர் வெளிநாட்டில் திருட்டுத்தனமாக 3 ஆயிரத்து 500 கோடி ரூபாவை சேமித்து வைத்த நிலையிலேயே புகழ் பெற்றுள்ளார்.

இந்த 3 ஆயிரத்து 500 கோடி ரூபாவில் ஒரு மாதத்துக்கு ஒரு கோடி ரூபா என்ற அடிப்படையில் செலவழித்தால் 250 வருடங்களுக்கு இவரின் 5 தலைமுறைகள் சொகுசாக வாழமுடியும்.

ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் ரூபா என்ற வகையில் செலவழித்தாலும் 900 வருடங்களுக்கு இவரின் 18 தலைமுறைகள் இந்தப் பணத்தில் சொகுசாக வாழ முடியும்.

நிரூபமா ராஜபக்சவுடன் ராஜபக்சக்களை சேர்த்தால் ஒரு சமன் பாட்டையே உருவாக்க முடியும் என குறிப்பிட்டு்ளளார்.

Contact Us