பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா?

தமிழகத்தில் பிரபல்யமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஓளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். பிக்பாஸ் 4 சீசன்களும் ரசிகர்களின் வரவேற்போடு வெற்றிகரமாக ஓடியது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை (03) பிக்பாஸ் சீசன் 5 கோலகலமாக ஆரம்பிக்கப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இந்நிகழ்ச்சியை வழக்கம் போல உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் சிறப்பாக தொகுந்து வழங்கிவருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 5-யில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் அபிஷேக் ராஜாவும் ஒருவர். இவர் பல்வேறு நடிகர் நடிகைகளை விமர்சித்ததன் மூலம் மிகவும் பிரபல்யமானவர்.

இவர் தற்போது பிக்பாஸ் வீட்டில் தன்னை ஒரு நல்ல பிள்ளையாக காட்டிக் கொண்டு இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்து கமல்ஹாசன் பற்றியும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி விமர்சித்த காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருவதால் ரசிகர்கள் அனைவரும் அபிஷேக் மீது கோபமாக இருப்பதாகவும் கட்டாயம் இவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகின்றது.

Contact Us