இம்முறை லண்டனில் மாவீரர் தினம் லண்டன் எக்ஸெல் மண்டபத்தில் இடம் பெறும் TCC அறிவிப்பு !

பிரித்தானியாவில் அடுத்த மாதம் (நவம்பர் 27) மாவீரர் தினம், லண்டன் எக்ஸெல் மண்டபத்தில் இடம்பெறும் என்று பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) அறிவித்துள்ளது. காலை 10.30 மணிக்கே கதவுகள் திறக்கப்படும் என்ற அறிவித்தலும் கூடவே வெளியாகியுள்ளது. கடந்த வரும் கொரோனா தொற்று காரணமாக மாவீரர் தினம் தடைப்பட்டு இருந்தது. இம் முறை மிக மிக நேர்த்தியாக அதனை நடத்த TCC திட சங்கல்பம் பூண்டுள்ளது. மேலும் இம் முறை மாவீரர் தினம் சனிக்கிழமை வருகிறது. எனவே பள்ளி மாணவ மாணவிகள் பலர் இதில் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்கப்படுகிறது.

Contact Us