நடிகை சஞ்சனா கல்ராணியை கார் டிரைவர் கடத்தினாரா?… வெளியான பரபரப்பான தகவல்…!!!

 

கன்னட சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சஞ்சனா கல்ராணி கடந்த ஆண்டு போதைப்பொருள் வழக்கில் சிக்கியிருந்தார். தடய அறிவியல் ஆய்வில் சஞ்சனா போதைப்பொருட்களை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. தற்போது ஜாமினில் வெளியே வந்த சஞ்சனா நேற்று முன்தினம் ராஜராஜேஸ்வரி நகரில் நடந்த சினிமா படப்பிடிப்பில் கலந்துகொள்ள பெங்களூர் இந்திராநகரில் இருந்து வாடகை காரில் சென்றுள்ளார். அப்போது டிரைவர் சூசை மணிக்கும், சஞ்சனாவுக்கும் இடையில் காரில் ஏசி போடும் விவகாரம் தொடர்பாக சிறிய மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் சஞ்சனா கார் டிரைவரை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து டிரைவர் சூசை மணி சஞ்சனா மீது ராஜராஜேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சஞ்சனா தகாத வார்த்தையில் திட்டுவது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் சூசை மணி போலீசாரிடம் வழங்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று நடிகை சஞ்சனா அளித்த பேட்டியில் ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னிடம் சொந்த கார் இல்லை. ஏற்கனவே என்னிடம் இருந்த காரை என் கணவர் பயன்படுத்துகிறார். இதனால் இந்திரா நகரில் இருந்து ராஜராஜேஸ்வரி நகருக்கு நான் வாடகை காரில் சென்றேன்.

டிரைவரிடம் சினிமா படப்பிடிப்பு நடந்த ராஜராஜேஸ்வரி நகருக்கு செல்ல வேண்டும் என கூறினேன். ஆனால் கார் கொங்கேரி நோக்கிச் சென்றதால் என்னை கடத்தி செல்வதாக உணர்ந்தேன். அது பற்றி டிரைவரிடம் தகராறு செய்தேன். நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. டிரைவரை தகாத வார்த்தையில் திட்டவில்லை. போலீசில் என் மீது டிரைவர் புகார் அளித்துள்ளார். நான் பல்வேறு பகுதிகளுக்கு மேக்கப் போடாமல் சென்று வருவேன். இதனால் யாரும் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாது. டிரைவருக்கு என்னை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கார் வேறு பாதையில் சென்றது பற்றி கேட்டதால் என் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். நான் ஒரு நடிகை என்பதால் இந்த விவகாரம் பெரிதாக பார்க்கப்படுகிறது’ எனக் கூறியுள்ளார். இதுகுறித்து கார் டிரைவரிடமும், சஞ்சனாவிடமும் விசாரணை நடத்திய போலீசார், பின் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே நடிகை சஞ்சனா காரில் கடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Contact Us