செல்பிக்கு போஸ் கொடுத்து பிரபலமான கொரில்லா.. பாதுகாவலரின் மடியிலேயே உயிர்பிரிந்தது.. வெளியான புகைப்படம்..!!

 

காங்கோவில் கடந்த 2019 ஆம் வருடத்தில் வன பாதுகாவலரான மேத்யூ ஷவாமுடன் சேர்ந்து நடாகாஷி மற்றும் மடாபிஷி என்ற கொரில்லா குரங்குகள் இரண்டு செல்ஃபி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது. அதன்பின், அந்த புகைப்படம் வைரலாகி, அந்த இரண்டு குரங்குகளும் பிரபலமானது.

இந்நிலையில், அந்த 2 குரங்குகளில் ஒன்றான நடாகாஷி என்ற பெண் கொரில்லாவிற்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், தன் பராமரிப்பாளர் மற்றும் வனபாதுகாவலர் மேத்யூ ஷவாமு மடியில் படுத்தபடியே நடாகாஷி உயிரிழந்துள்ளது. நடாகாஷிக்கு 14 வயது ஆகிறது.

Contact Us