சுமார் 50 போலீசார் என்னை மிரட்டுகிறார்கள்…. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய லண்டன் போலீசார்….!!

 

தெற்கு லண்டனில் கடந்த மார்ச் மாதம் சாரா எவரார்ட் என்ற 33 வயது பெண் வானே கோஸின்ஸ் என்ற காவல்துறை அதிகாரியால் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக பொய்யாக கைதுசெய்யப்பட்டு பின்பு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிகிறது. பின்னர் இந்த போலீஸ் அதிகாரி சாராவின் கழுத்தை நெரித்து கொன்று உடலை அருகில் உள்ள இடத்தில் புதைத்தார். இச்சம்பவம் லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி சாராவுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் சாரா காணாமல்போன இடத்திற்கு அருகிலுள்ள கிளாபம் காமன் பூங்காவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக 4 பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அதில் பாஸ்டி ஸ்டீவன்சன் என்பவரும் ஒருவராவார். இருபத்தி எட்டு வயதாகும் இந்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டு கீழே தள்ளப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து பிரித்தானிய காவல்துறையினர் பெண்கள் மீது வன்முறை செய்வதாக தொடர்ந்து பரவலான விவாதம் எழும்பியது. இந்நிலையில் பாஸ்டி ஸ்டீவன்சன் மேலும் பல அதிர்ச்சியான தகவல்களை கூறியுள்ளார். அது காவல்துறையினரை மேலும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

Contact Us