“எதை வேணும்னாலும் எடுத்துக்க என்னை விடுடா .. “தனியே இருந்த தாய் -மகளுக்கு மர்ம நபரால் நடந்த கொடூரம்

 

ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து தாய்-மகளை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்த பயங்கரம் நடந்துள்ளது.பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து தாய்-மகள் படுகொலை கர்நாடக மாநிலம் பெங்களூரு பேகூரு பகுதியின் சவுடேஷ்வரிநகரில் 45 வயதான சென்னவீரசாமி ,தனது 38 வயதான மனைவி சந்திரகலாவுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.அந்த கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .அவரின் மனைவி ஆன்லைனில் மருந்து பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலையில் அந்த கணவர் வீராசாமி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார் .அதன் பிறகு அவரின் மனைவியும் அவரின் நாலு வயதான பெண் குழந்தையும் தனியாக வீட்டில் இருந்தனர் .அப்போது ஒரு மர்ம நபர் அந்த வீட்டினுள் நுழைந்து ,அந்த வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்துள்ளார் .இதை தடுக்க முயன்ற சந்திரக்கலாவையும் ,அப்போது சத்தம் போட்டு அழுத குழந்தையையும் அந்த நபர் பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டார் .

பின்னர் அவரின் சகோதரி அவரை பார்க்க வீட்டினுள் வந்த போது ,இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அலறினார் .பிறகு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .பிறகு போலீஸ் அங்கிருந்த சிசிடிவி கேமெராவை ஆராய்ந்து பார்த்து குற்றவாளியை பிடிக்க ,பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர் .

Contact Us