“உதவி செய்ய வர்றேன்னு உல்லாசத்துக்கு… “தனியா வசித்த விதவைக்கு நேர்ந்த கதி

 

சந்தைக்கு சென்று விட்டு வந்த பழங்குடியின பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர் .
மேற்கு வங்கத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 35 வயதானபழங்குடியின பெண் தனது கணவர் மற்றும் குழந்தையோடு வசித்து வந்தார் .சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் கணவர் திடீரென்று இறந்து விட்டார் .அதனால் அந்த பெண் தன்னுடைய குழந்தையுடன் தனியே வசித்து வந்தார் .இப்படி அந்த பெண் தனியே வசிப்பதை அந்த பெண்ணின் வீட்டுக்கருகே வசித்த அதே சமூகத்தை சேர்ந்த ஒருவர் நோட்டமிட்டார் .அதனால் எப்படியாவது அந்த பெண்ணை அடைய அவர் ஆசை வலை விரித்து ,அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி வந்தார் .ஆனால் அவரின் வலையில் அந்த பெண் விழாமல் தப்பி வந்தார் ,

இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அந்த பெண் அங்குள்ள ஒரு சந்தைக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் தனியாக வீடு திரும்பி கொண்டிருந்தார் .அப்போது அந்த சந்தைக்கு வந்த அந்த வாலிபரும் அதை கவனித்து அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்தார் .பிறகு ஒரு இருட்டான தனிமையான பகுதிக்கு அந்த பெண்ணை இழுத்து சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டார் .

அதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அங்குள்ள கால்வாய் அருகே கிடந்ததை உள்ளூர் மக்கள் பார்த்தனர் .பிறகு அவர்கள் அங்குள்ள காவல் நிலையம் சென்று புகார் தந்தார்கள் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணை மீட்டு அங்குள்ள சுகாதார மையத்தில் சிகிச்சைக்கு அனுப்பினர் .பின்னர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்த நபரை கைது செய்தனர்

Contact Us