7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் போக்சோவில் கைது!

 

கோவை அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(66). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2ஆம் வகுப்பு படித்து வரும் 7 சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை அளித்துள்ளார். பின்னர், இதனை வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் சிறுமிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி அழுது கொண்டே சென்று தனது பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான சிறுமியின் பெற்றோர், உடனடியாக துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், மகளிர் போலிசார் கூலி தொழிலாளி பழனிச்சாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், ரகசிய தகவலின் பேரில் நேற்று உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பழனிச்சாமியை போலீசார் கைது செயதனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Contact Us