“வெடிகுண்டை உடலில் கட்டிக்கொண்டு ” -ஒரு கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை

 

மனித குண்டை உடலில் கட்டி கொண்டு வெடிக்க வைத்த ஒரு கணவனால் ,கணவன் மனைவி இருவரும் இறந்தனர்

மிசோரம் மாநிலம் லுங்லேயில் வசிக்கும் 62 வயதான ரோமிங்லியானா என்ற நபர் 61 வயதான லந்தியாக்ளிமி என்ற பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு அவர் இரண்டாவது கணவன் ஆவார் .சில மாதங்களுக்கு அந்த மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார் .அதனால் அந்த கணவர் அந்த பெண் மீது கடும் கோபத்திலிருந்தார் .

அதனால் தன்னை இந்த வயதான காலத்தில் தனியாக தவிக்க விட்ட மனைவியையே பழி வாங்க துடித்தார் .அதற்காக அவர் கடந்த வாரம் ஜெலட்டின் வெடி மருந்து அடங்கிய வெடி பார்சலை தன்னுடைய உடலில் கட்டி கொண்டார் .பிறகு அந்த மனைவியின் அருகில் அமர்ந்து சிகெரட்டை பற்ற வைத்தார் .உடனே அவரின் உடலில் இருந்த வெடிகுண்டு வெடித்தது .இந்த வெடி விபத்தில் இருவரும் தீயில் கருகி கிடந்தனர்

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இருவரும் லுங்லே மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு, உடல்கள் லுங்லேயிலிருந்து வடக்கே 73 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தில்ட்லாங் கிராமத்திற்கு அனுப்பப்பட்டன.இந்த சம்பவத்தில் அவரின் அருகிருந்த மகள் காயமின்றி தப்பினார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Contact Us