காதலியை திருப்திப்படுத்த வயகரா மாத்திரைகளை திருடிய நபர்!

பிரித்தானியாவில் மருந்தகம் ஒன்றில் வயகரா மாத்திரைகளை திருடியவர், நீதிமன்றத்தில் தன்காதலியை திருப்திப்படுத்ததான் திருடியதாக கூறி தன்னை பிணையில் விடுவிக்கக் கோரியதையடுத்து, அவரக்கு 12 மாத நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

பிரித்தானியாவின் ஸ்டப்போர்வுஷயர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் கூப்பர், 46 வயதான இவர் புதியதாக ஒரு பெண்ணுடன் டேட்டிங்கை ஆரம்பித்துள்ளார்.

 

இந்நிலையில் இவர் வீட்டில் கஞ்சா பயன்படுத்தி வருவதாக பொலிஸாருக்கு கடந்த மார்ச் மாதம் தகவல் கிடைத்தது. அதன் பேரில் பொலிஸார் கடந்த மார்ச் 11ஆம் திகதி சோதனை நடத்திய போது அவரது வீட்டிலிருந்த 10 யூரோ (இந்தியா மதிப்பில் சுமார் ரூ1000) மதிப்பிலான கஞ்சாவை பொலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இது குறித்து எப்பொழுது வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைப்போம் நீங்கள் வர தயாராக இருக்க வேண்டும் என கூறி சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் 19ஆம் திகதி அவர் தன் வீட்டின் அருகிலிருந்து மருந்துகடைக்கு சென்று அங்குள்ள 4 பாக்கெட் வயகரா மாத்திரையை திருடி சென்றுள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கூப்பர் தரப்பிலிருந்து அவருக்கு பிணை கோரப்பட்டது. அதற்காக அவரது வக்கீல் சொன்ன வாதம் தற்போது வைரலாகியுள்ளது.

அவரது வக்கீல் : “கூப்பர் ஒன்றும் பெரிய தவறு செய்யவில்லை. அவர் திருடிச் சென்ற மாத்திரைகளை அவருக்காக தான் திருடிசென்றார். அவரது புதிய காதலியை கட்டிலில் திருப்தி செய்ய அவருக்கு வயகரா தேவைப்படுகிறது. அதனால் வேறு வழியின்றி திருடினார்” என வாதிட்டுள்ளார்.

இந்நிலையில் நீதிமன்றம் அவரக்கு 12 மாத நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கியுள்ளது. அதன் படி அவர் 35 யூரோ நஷ்ட ஈடு, 22 சர்சார்ஜ், அபராதமாக கட்ட வேண்டும் மேலும் அவரிடமுள்ள 10 யூரோ மதிப்பிலான கஞ்சாவை அழிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தி வைரலாக பரவி வரும் நிலையில் பலர் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Contact Us