“தொழிலதிபர் ஃ பர்ஸ்ட் ,ஆடிட்டர் நெக்ஸ்ட்” -ஒரு சட்ட கல்லூரி மாணவிக்கு கூட்டாக நடந்த கொடுமை

 

ஒரு தொழிலதிபரும் ஒரு ஆடிட்டரும் ட்ரைனிங் வந்த பெண்ணை பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டனர்
குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் பிரபல ஆடிட்டராக இருப்பவர் அசோக் ஜெயின் .அவரின் நண்பர் ராஜூ பட் ஒரு பெரிய தொழிலதிபர் மட்டுமல்லாமல் ஒரு கோவிலின் அறங்காவல் தலைவர் .

இந்நிலையில் அந்த ஆடிட்டரிடம் ஹரியானாவைச் சேர்ந்த ஒரு சட்ட மாணவி, கடந்த சில மாதங்களாக பயிற்சி பெற வந்தார் .அப்போது அந்த ஆடிட்டர் அசோக் அந்த பெண்ணுக்கு பலமுறை வலை விரித்தார் .ஆனால் அந்த பெண் அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தார் .இந்நிலையில் ஒரு நாள் அந்த ஆடிட்டரும் அவரின் நண்பரான அந்த தொழிலதிபர் ராஜு பட்டுவும் அந்த பெண்ணுக்கு குளிர் பாணத்தில் மதுவை ஊற்றி கொடுத்து அவரை நிர்வாண படமெடுத்துள்ளார்கள் .பின்னர் அந்த மது மயக்கத்தில் அந்த பெண்ணை மிரட்டி இருவரும் பலாத்காரம் செய்தனர் .பிறகு அந்த பெண்ணிடம் அந்த வீடியோவை காமித்து இதை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டினர் .ஆனால் அந்த பெண் ஒரு மாதத்திற்கு பிறகு தைரியமாக அவர்கள் மீது போலீசில் புகார் தந்தார் .போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்தனர்

இப்போது குற்றம் சாட்டப்பட்ட ஆடிட்டர் வதோதரா குற்றப்பிரிவால் பவ்நகரில் இருந்து வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். மற்ற குற்றவாளி ராஜூ பட் ஒரு வாரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

Contact Us