அவரின் தீவிர ரசிகை நான்…. என் கனவு நிறைவேறியது…. மகிழ்ச்சியுடன் பேசிய சாக்ஷி அகர்வால்….!!

 

இளம் கதாநாயகி சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும்” பஹிரா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அமைரா, ஜனனி, காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர்களும் கதாநாயகிகளாக இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றபோது இதில் படக்குழுவினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சாக்ஷி அகர்வால் பேசும்போது, ”பஹிரா” படத்தின் இயக்குனர் என்னிடம் கதை சொல்லும் போது 7 கதாநாயகிகள் என்று கூறினார்.அதை கேட்டவுடன் நான் இந்த படத்தை எப்படி இயக்குவார் என்று பயந்தேன்.

ஆனால், நினைத்ததை விட சிறப்பாக இயக்கியிருக்கிறார். நான் பிரபுதேவாவின் தீவிர ரசிகை. அவருடைய படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி எனவும், உங்களுடன் நடித்ததன் மூலம் என் நீண்டநாள் கனவு நிறைவேறி விட்டதாகவும் கூறியுள்ளார்.

Contact Us