உப்பு சாப்பிட வைத்த கொடுமை…. சித்தியின் செயலுக்கு உடந்தையாக இருந்த தந்தை…. பிரபல நாட்டில் சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்….!!

 

பிரித்தானியாவில் கடந்த 16ம் தேதி சோலி ஹூக்ளின் ஷெர்லி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆர்தர் லாபின்ஜோ ஹியூஸ் என்ற ஆறு வயது சிறுவன் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைக்காக பார்கிம்காம் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன் மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவன் இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். இந்நிலையில் போலீசார் சந்தேகத்தின் பெயரில் ஆர்தரின் தந்தை மற்றும் அவருடைய இரண்டாவது மனைவியை கைது செய்தனர்.

இருவரிடமும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் சிறுவனை தினமும் கொடுமைப் படுத்தி அவனை பராமரிக்காமல் நீண்டகாலம் தனிமைப் படுத்தியது தெரியவந்துள்ளது. மேலும் அந்த சிறுவனுக்கு உணவு, குடிநீர் போன்ற எந்த அடிப்படை தேவைகளையும் தராமல் வலுக்கட்டாயமாக ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை நிற்க வைப்பது, மற்றும் அச்சிறுவனை உறவினர்கள் யாரும் அணுக முடியாமல் தனிமைப்படுத்துவது என பலர் துன்புறுத்தல்கள் செய்துள்ளனர். மேலும் அவனை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

இந்நிலையில் அச்சிறுவனை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்துள்ளனர். அதாவது அந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்று 11:45 மணியிலிருந்து மதியம் 1:45 மணி வரை குறைந்தது 34 கிராம் அளவுக்கு உப்பை உட்கொள்ளச் செய்து கொடுமை படுத்தியுள்ளனர். மேலும் அச்சிறுவனின் வாயில் ரத்தம் வடிந்துள்ளது பற்களும் சிதைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் சிறுவனை தாக்கியதை ஒப்புக்கொண்டனர். ஆனால் கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர் என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Contact Us