“மேலாடையில்லாத மாணவிகள் ,டீச்சர்களை உருவாக்கி .. -“ஒரு ஐஐடி மாணவரின் ஆபாச லீலைகள்

 

ஒரு ஐஐடி மாணவர் பல பள்ளி மாணவிகளின் மார்பிங் செய்த ஆபாச படங்களை உருவாக்கி டார்ச்சர் செய்ததால் கைது செய்யப்பட்டார்
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர்19 வயதான மகாவீர் குமார். இவர் கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) பி டெக் படித்து வரும் இளைஞர் ஆவார் .

இவர் டெல்லியில் உள்ள பிரபல பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் அந்த பள்ளியின் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்ட பல மாணவிகளையும் பெண் ஆசிரியையும் அவர் தன்னுடைய வாட்ஸ்அப் குழுக்களில் சேர்த்தார் . பிறகு அந்த மாணவிகளின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பினார் .
அதன் பிறகு அந்த குமார் பல போலியான இன்ஸ்டாகிராம் கணக்குகளை பெண் ஆசிரியைகளின் பெயரில் உருவாக்கினார் .பிறகு அவர்களின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்களை அவர்களுக்கும் அனுப்பினார் .அதன் பிறகு 50 க்கும் மேற்பட்ட போலி கணக்குகள் மூலம் ஆபாச படங்களை பல மாணவிகளுக்கு அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தார் .மேலும் சர்வதேச நம்பரில் இருந்து போலியான அழைப்புகள் செய்து அவர்களை டார்ச்சர் செய்தார் .அதனால் பாதிக்கப்பட்ட சிலர் போலீசில் புகார் தந்தனர்
அந்த புகாரின் பேரில் போலீசார் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் கணக்குகளை உருவாக்க பயன்படும் மின்னஞ்சல் ஐடியின் ஐபி பதிவுகள் பற்றிய விவரங்களை ஆராய்ந்து , தொழில்நுட்ப கண்காணிப்பின் மூலம், குமாரை கண்டுபிடித்து பாட்னாவில் உள்ள அவரது வீட்டிலிருந்து கைது செய்தனர் .

Contact Us